நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரில் இருந்து இருவரும், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால் நடிகையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், நான் கடந்த 2003-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என தலைவர் சோனியா காந்தி உறுதியளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் 18 வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லையா என கேள்வி எழுப்பியிருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வாக படக் கூடிய நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தனது வாய்ப்பளிக்காமல் ராஜஸ்தானை சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்தால் நக்மா தனது அதிருப்தியை பயங்கரமாக வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகை நக்மா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதுபற்றி நக்மா அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பேசும்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது ஒன்பது மொழிப் படங்களில் அவர் நடித்து கொண்டிருந்தார். 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அந்த பதவியை அப்போது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சினிமாவில் நடிப்பது பாதிக்கப்படும் என்பதால் அவரை தவிர்த்து விட்டார். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ஏழு வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய நக்மா எப்படி தனது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் இந்த முறை மாநிலங்களவைக்கு செல்லும் முயற்சிகளையும் அவர் செய்து வந்தார் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் கட்சிக்காக கடுமையாக உழைத்த தனக்கு இதற்குமேல் என்ன தகுதி வேண்டும் என வெளிப்படையாக கேட்டுவிட்டார். இதுபற்றி கட்சி மேலிடத்தில் தனது விளக்கத்தை அளித்திருக்கின்றார் என்றனர். மேலும் நக்மா கட்சி மாறுவது பற்றிய பேசிய அவர்கள் நக்மாவின் உழைப்பும், அவருக்கு பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்தும், பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அதிகமாக பாஜகவில் இருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவருக்கு மற்ற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவுமே இல்லை என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி தெரிவித்த நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். மேலும் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களையும் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களையும் குஷ்பு வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். அதன்பின் அவர் பாஜகவில் இணைந்தார். அதேபோல் நக்மாவும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதால் குஷ்பு பாணியில் நக்மாவும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.