Categories
அரசியல்

காங்கிரஸுக்கு செம சான்ஸ்…. பாஜகவிற்கு காத்திருக்கும் சவால்…. அனல்பறக்க போகும் மணிப்பூர் தேர்தல்….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இருப்பினும் அதன் இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நாகாஸ் மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கிறிஸ்துவ சமூகத்தினரை அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி நாகாஸ் மற்றும் குகிஸ் சமூக மக்கள் மத்தியிலும் பாஜக அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் சர்வாதிகாரி போன்று செயல்படுவதாக சில எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எந்தவொரு விஷயத்தையும் அதிகாரிகளை கேட்டே முடிவு எடுக்கிறார். தங்களை கேட்டு முடிவெடுப்பதில்லை என்று அமைச்சரவை சகாக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் டெல்லி பாஜக தலைமையின் காதுகளுக்கு செல்ல உடனே முதல்வர் பைரேன் சிங்கை அழைத்து அனுசரித்து செல்லுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாநில பாஜக பொறுப்பாளராக சம்பித் மித்ராவை நியமித்து உட்கட்சி பூசலை தற்காலிகமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் ஊழல் புகார்கள், சிஏஏ சட்டத்திருத்தம் ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. இது ஆளும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பாஜக அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து, தேர்தலுக்கு முன்பாகவே வலுவான கூட்டணியை உறுதி செய்ய முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் முடிவு செய்துள்ளார்.எனவே இம்மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான காங்கிரஸின் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Categories

Tech |