Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸை அழிக்க இவரே போதும்…. நாம் எதுவும் செய்ய வேண்டாம்…. சிவ்ராஜ் சிங்க் சவுகான்…!!!

பஞ்சாப் மாநில முதல்வர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமரீந்தர் சிங், அக்கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவர்  சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை யாரும் எதிர்பாராதவிதமாக சித்துவும் ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த குழப்பம் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையி செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங்க் சவுகான், ராகுல் காந்தி இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியை அழிக்க யாரும் தேவையில்லை. அவரால் தான் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டே போகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உறுதியாக இருந்த காங்கிரஸ், தற்போது அவரால் தள்ளாடி வருகிறது. அம்ரிந்தர் சிங்கை முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். ஆனால் சித்து தற்போது கட்சியை விட்டு ஓடி விட்டார். ராஜ் ராகுல் காந்தி இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியை அழிக்க நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அவரே பார்த்துக் கொள்வார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |