கேரளா காங்கிரஸ் எம்பிக்கள் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார்.
லட்சத்தீவு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த கேரள காங்கிரஸ் எம்பிக்களின் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் லட்சத்தீவு செல்வதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் வருகைக்கான விண்ணப்பத்தை லட்சத்தீவு அதிகாரி மறுத்துள்ளார். மேலும் இவர்களின் வருகை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. மேலும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப் படுகிறது என்று அவர் காரணம் தெரிவித்துள்ளார்.