Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் எம்.பி மறைவு… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ” வசந்தகுமார் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். நான் அவருடன் உரையாற்றிய போது, தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை அறிந்தேன். வணிகம் மற்றும் சமூக சேவையில் அவரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் முழுவதும் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை அவரிடம் நான் கண்டுள்ளேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |