காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் மக்களை ஏமாற்றுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் இந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் பல்வேறு நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவை நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி மேற்கு சம்ரன் பகுதியில் உள்ள பல்மிகி நகரில் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் ராஷ்டிரிய ஜனதா தளமாக இருந்தாலும் மக்களை ஏமாற்ற மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவர்கள் ஜாதி, மதம் மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது. மக்கள் ஒருங்கிணைப்பது அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது”என்று அவர் கூறியுள்ளார்.