Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின் தூண் சாய்ந்தது… கே.எஸ் அழகிரி…!!!

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ” வசந்தகுமார் என்றாலே காங்கிரஸ், காங்கிரஸ் என்றாலே வசந்தகுமார். அவரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. கொரோனா காலகட்டத்திலும் தனது தொகுதி மக்களுக்கு வாரி வாரி வழங்கியவர். அவர் உள்ளதால், அரசியலால் மற்றும் தொழிலால், புகழால் அதிக அளவு உயர்ந்துள்ளார். அது மட்டுமன்றி அவரின் மறைவு தமிழக காங்கிரஸுக்கு பேரிழப்பு” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |