மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட சிவசேனா கட்சியானது, முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காத காரணத்தினால் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் கீதே, காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. இரண்டு காங்கிரஸ் கட்சிகள் ஒரே கட்சியாக முடியாது. சிவசேனா எப்படி காங்கிரஸ் ஆக மாற முடியும்? சரத்பவாருக்கு எத்தனை பட்டங்கள் கொடுக்கப்பட்டாலும் கவலையில்லை. அவர் எங்களுடைய அரசியல் குரு கிடையாது. எங்களுடைய குரு பால் தாக்கரே மட்டுமே என்று கூறியுள்ளார். ஆனந்த் கீதேவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.