காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ராஜீவ் தியாகி மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை மோசமான வார்த்தையால் விமர்சனம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பாக டெல்லி காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி, தனியார் தொலைக்காட்சியில் பெங்களூரு கலவரம் குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
அப்போது ராஜீவ் தியாகிகும், பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ராஜீவ் தியாகியை நோக்கி துரோகி என்ற அர்த்தத்தைக் குறிக்கும் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையைப் சம்பித் பத்ரா பயன்படுத்தினார். விவாத நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் ராஜீவ் தியாகி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நிலையில் ராஜீவின் மரணம் தொடர்பாக பலரும் சம்பித் பத்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.