Categories
தேசிய செய்திகள்

நீங்க தான் வரணும்…! நீங்க இல்லனா…. யாருமே இல்லை…. காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்..!!!

காங்கிரஸ் தலைவரான திரு ராகுல் காந்தி உடனடியாக பதவி ஏற்க அக்கட்சியின் டெல்லி காரிக்கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து திரு ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக திருமதி சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். இதன் இடையே திரு ராகுல் காந்தியே  மீண்டும் கட்சி தலைவராக வர வேண்டும் என  காங்கிரஸ் மூத்த தலைவர் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று கூடியது. இதில் காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கையும்  மன உறுதியை அதிகரிக்க திரு ராகுல் காந்தி கட்சியின் தலைவராக உடனடியாக பதவி ஏற்க வேண்டியது  அவசியம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |