Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் போட்டி…. ராஜஸ்தான் முதல்வராகும் சச்சின் பைலட்…..? இன்று ஆலோசனை நடப்பதாக தகவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரர் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவருக்கான பதவிக்கு காந்தி குடும்பத்தினர் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் புதிய முதல்வராக சச்சின் பைலட் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாடு இருக்கிறது. இதனால்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், புதிய முதல்வராக சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |