Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்…. பா.சிதம்பரம் பேச்சு…!!

காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய  ப.சிதம்பரம் பேசுகையில், “வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். ஊரடங்கினால் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்கள் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு இன்றி 12 கோடியே 50 லட்சம் பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் பா.ஜனதாஆட்சியின் அவலம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அறிவிக்கின்ற புதிய திட்டங்களை எண்ணி மக்கள் ஏமாற போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்று கூறிஉள்ளார் .

Categories

Tech |