Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பலவீனமடைவதை…. எங்களால் பார்க்க முடியவில்லை…. கபில் சிபில் வேதனை…!!!

தற்பொழுது காங்கிரஸில் நடந்துவரும் உட்கட்சி மோதல் மற்றும் பிற கட்சிகளுக்கு பிரபல இளம் தலைவர்கள் செல்வது குறித்து கட்சியானது பலவீனமடைவதை  எங்களால் பார்க்க இயலவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கட்சியை விட்டு ஜி-23யின்  தலைவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். ஆனால் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்களே விலகி விட்டார்கள்.

எங்களால் காங்கிரஸ் கட்சியானது பலவீனம் அடைவதை பார்க்க இயலவில்லை. காங்கிரஸில் சரியான தலைவர் இல்லை. அவருக்கு பதிலாக வேறு எவரோ முடிவுகளை எடுத்துக் கொண்டு வருகிறார். அது யார்? என்பது எங்களுக்கு தெரியும். இதை குறித்து கருத்து கூறுவது அர்த்தமற்ற செயலாகும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்திய குடியரசை காப்பாற்ற இயலும். எனவே கட்சியில் இருந்து விலகியவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டும்”என்று கூறியுள்ளார்.

Categories

Tech |