Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பாத யாத்திரையில்…. காங்கிரஸ் தலைவர் திடீர் மரணம்…. சோகம்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  ஒற்றுமைப்பயணத்தில் பங்கெற்றிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஒற்றுமை பயணத்தில் நடந்து வந்த பாண்டே கடைசி நிமிடம் வரை தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மறைந்த கிருஷ்ணகுமார் பாண்டே மாராட்டிய மாநில காங்கிரஸின் சேவா தள பொதுச்செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |