இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களின் நடைபெறவிருந்த தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக தலைவர் சோனியா காந்தியின் பதவி காலம் விரைவில் முடிவதால் புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.