தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் தான் குமரி அனந்தன். இவருக்கு வயது 90 ஆகும் நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Categories