நாடு முழுவதும் இன்று 71 குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தூரில் காங்கிரஸ் நடத்திய குடியரசு விழாவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரச்சனை மூண்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருவரையும் அப்புறப்படுத்திய பிறகு தான் குடியரசுதினவிழா அமைதியாக நடைபெற்றது.