மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்கள் நாடு முழுதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இந்த குழுக்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சென்ற 10 வருடங்களாக அங்கு தன் அமைதிப்படையை நிறுத்தி இருக்கிறது. இந்த அமைதிப் படையில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பணிபுரிந்ந்து வருகின்றனர்.
எனினும் வன்முறையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி ஐ.நா. அமைதிப்படைக்கு எதிராக காங்கோ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் காங்கோவின் வடக்கு கீவ் மாகாணத்திலுள்ள புட்டெம்போ நகரில் ஐ.நா. அமைதிப் படைக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இவற்றில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் ஆகிய இருவரும், எகிப்து நாட்டை சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் காங்கோ வன்முறையில் இந்தியா மற்றும் எகிப்து நாட்டின் அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த அமைதிப் படை வீரர்களின் குடும்பங்களுக்கும், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளின் அரசுக்கும், மக்களுக்கும் தன் இரங்கலை தெரிவித்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.