Categories
தேசிய செய்திகள்

காசநோய்: வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள்…. மத்திய அரசு போட்ட திட்டம்…. மக்களவையில் வெளியான தகவல்….!!!!

வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காச நோயை ஒழிக்க அரசானது திட்டமிட்டுள்ளது  என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக பதில் அளித்ததாவது “நாட்டில் நடப்பு ஆண்டு ஜனவரி -அக்டோபா் வரை 20.16 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நோயால் 73,551 போ் மரணம் அடைந்தனா்.

உலகளாவிய காச நோய் அறிக்கை 2022ன் படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 % குறைந்துள்ளது. காசநோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் வாயிலாக வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |