Categories
தேசிய செய்திகள்

காசியிலிருந்து திருடப்பட்ட வெள்ளை பளிங்கு சிவலிங்கம் ….!!

காசியில் திருடப்பட்டு ரேணிகுண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை பறிமுதல் செய்த சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த சிவசங்கரன் திருவாதுரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் காசியில் இருந்து வெள்ளைப் பளிங்குக் சிலையை திருடியதாகவும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக சிலையை ரேணிகுண்டாவில் பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிவசங்கரன் ராஜேஷ் கண்ணன் ஆகியோரை சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிலை திருட்டு தடுப்பு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

Categories

Tech |