Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு …!!

சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். காசி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு பெண் காசி மீது புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரும் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |