கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம் நாட்டில் சிலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் துயரத்தை போக்க உயர்ந்த மனப்பான்மை கொண்ட சிலர் மட்டுமே முன்வருகின்றனர். அதன்படி கோவையில் பெண் ஒருவர் இலவசமாக சாப்பாடு வழங்கி அசத்தியுள்ளார்.
கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் உணவகம் வைத்து நடத்தி வரும் சப்ரினா என்ற இளம்பெண், ஒரு பிளேட் பிரியாணி 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். அந்த இருபது ரூபாய் கூட கொடுக்க இல்லாதவர்களுக்கு இலவசமாகவே பிரியாணியை வழங்கி, அவர்களின் பசியைப் போக்குகிறார். இவரின் செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.