Categories
தேசிய செய்திகள்

காசு கொஞ்சம் மிச்சமாகும்!…. பயணங்களுக்கு உதவும் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள்…. அதிரடி சலுகை….!!!!

பயணங்களுக்கு உதவக்கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

HDFC வங்கி

HDFC Regalia கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவிலுள்ள 12 ஓய்வறைகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள 6 ஓய்வறைகள் ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் கிடைக்கும். சில்லறை விற்பனையில் செலவிடப்படும் ரூ.150க்கு நான்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கிறது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.2,500 ஆகும். வருடத்துக்கு ரூபாய்.3 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணமானது தள்ளுபடி செய்யப்படுகிறது.

SBI பிரீமியர் கிரெடிட்கார்டு

Etihad Guest SBI பிரீமியர் கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இது இந்தியாவில் 8 ஓய்வு அறைகளுக்கும், வெளிநாட்டில் 4 ஓய்வறைகளுக்கும் அணுகலை வழங்குகிறது. இவை 5,000 Etihad கெஸ்ட் மைல்களை வரவேற்பு பரிசாக வழங்குகிறது. 1 காலண்டர் காலாண்டில் ரூபாய்.1.5 லட்சம்  செலவு செய்தால், வாடிக்கையாளர் 1,500 எதிஹாட் கெஸ்ட் மைல்களை பெறுகிறார். இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூ.4,999 ஆகும்.

Categories

Tech |