இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் சென்ற 1972 ஆம் வருடம் முத்து ராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் “காசேதான் கடவுளடா”. இப்போது இப்படத்தை மீண்டுமாக ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இதில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியாஆனந்த் நடித்துள்ளார்.
அத்துடன் இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அத்துடன் ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவானது அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.