காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.
Happy to be a part of #kaasethankadavulada . Thankyou to God, Family, friends and wellwishers❤️ #sivaangi pic.twitter.com/6jiACmtAgA
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) July 16, 2021
இதில் சிவா, யோகி பாபு இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் மேலும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .