காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1970-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. தற்போது இந்த படத்தின் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் & சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு N.கண்ணன் இசையமைக்கிறார்.
. @Dir_kannanR – @actorshiva – @PriyaAnand 's #KasethanKadavulada shoot is 80% completed.. @iYogiBabu #karunakaran #Oorvasi @sivaangi_k @balasubramaniem #ThalaivasalVijay @MasalaPix @mkrpproductions #MKRamPrasad @DoneChannel1 pic.twitter.com/34F7Rfv4H6
— Ramesh Bala (@rameshlaus) August 10, 2021
மேலும் கடந்த ஜூலை 16-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி காசேதான் கடவுளடா படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.