காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான எவர்கிரீன் நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் & சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
#KasethanKadavulada shoot wrapped up in a single schedule.
Produced & Directed by @Dir_kannanR @actorshiva @iYogiBabu @PriyaAnand #karunakaran #Oorvasi @sivaangi_k @VijaytvpugazhO @balasubramaniem #ThalaivasalVijay @MasalaPix @mkrpproductions @DoneChannel1 @digitallynow pic.twitter.com/7zLvYdqSsS
— kannan (@Dir_kannanR) August 23, 2021
மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு N.கண்ணன் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.