நடிகை ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டியுள்ளது .
கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இப்படி தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் இவர் அதிக பாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். மேலும் இவர் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.