திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். மேலும் பஜனைகள் ஒலிக்க முக்கிய வீதிகளில் உலா வந்துள்ளார். இதனை கண்டு களித்த பக்தர்கள் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.