Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின …!!

நிவர் புயல் மீட்பு பணிக்காக இராணுவத்தின் 8 குழுக்கள் சென்னை வர உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் வரும் இராணுவ குழுக்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்ல உள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் 4733 முகாம்களில் 13 லட்சம் பேரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். தற்போது 987 முகாம்கள் திறக்கப்பட்டு 24,166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தரர். 14 144 பாசன ஏரிகளில் 1579 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என கூறிய அமைச்சர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 148 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் தண்ணீர் தேங்கிய 53 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புயல் கரையை கடந்தவிட்ட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகே பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிவுறுத்தினார்.

Categories

Tech |