Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” காஞ்சிபுரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்….!!

 மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பர நாதர் என்னும் பெயரில் 1008 சிவலிங்கங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது . இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம் . இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிவபெருமானை வழிபட வந்துள்ளார்கள் . இதனால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .

 

அதோடு மூலவரும் உற்சவருமான ஏகாம்பரநாதருக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது . இதேபோல் காஞ்சிபுரத்திலுள்ள மற்ற சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Categories

Tech |