Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள்”… 31-ம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்….!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் 31ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகள், குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது. இதில் சில பதிவு செய்யாமலும் பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருகின்றது. இதனால் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால் தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விருதுகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இல் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது.

இதன்படி உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இம்மாத 31ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும் ஆய்வின் போது மகளிர் விடுதிகள் அனுமதி பெறாமல் இயங்கும் பட்சத்தில் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |