Categories
அரசியல் மாநில செய்திகள்

காடு வா வாங்குது…வீடு போ போங்குது – துரைமுருகனை கலாய்த்த செல்லூர் ராஜூ ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆங்கிலேயர்களில் ஒருவராக இருக்கின்ற பென்னிகுயிக் அவர்கள் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, தன்னுடைய சொந்த செலவில் தன்னுடைய மனைவியுடைய நகைகளை எல்லாம் விற்று ஐந்து மாவட்ட மக்களுக்காக தியாகம் புரிந்து அணையை கட்டியவர். இது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் நமக்கு பாத்தியம் இருக்கிறது.

எனவே கேரள அரசு அத்துமீறி ஒவ்வொரு முறை செய்கின்ற செயல்களை கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்று கொடுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவருடைய ஆன்மா திராவிட முன்னேற்றக் கழகத்தை மன்னிக்காது என்ற அடிப்படையில், அவர்தான் உச்ச நீதிமன்றத்தில் போராடி, வாதாடி பெற்றுக்கொடுத்தார் அவருடைய பெற்றுக்கொடுத்த உரிமையை கூட காக்க முடியாத, கையாலாகாத அரசாக திமுகவை கண்டித்து மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

அமைச்சர் துரைமுருகன் காமெடி பண்ணியிருக்கிறார், ஒரு அமைச்சர் இன்றைக்கு கேரள அரசை கண்டிக்க முடியவில்லை, வக்கில்லை, வகையில்லை, சுரணையில்லை, ரோஷம் இல்லை நீர்வளத் துறை அமைச்சராக இருக்கின்ற துரைமுருகன் 80 வயசு இன்றைக்கு காடு வா வாங்குது, வீடு போ போங்குது இந்த நிலையிலும் கூட அவர் தன்னிலை மறந்து, கார்புணர்ச்சியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும், அன்றைக்கு இருந்த முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் வசை பாடியிருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |