Categories
சினிமா

“காட்ஃபாதர்” படத்தின் போஸ்டர் வெளியீடு… புது கெட்டப்பில் அசத்தும் நயன்தாரா…. வைரல்….!!!!

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் “லூசிபர்”. இந்த படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இவற்றில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனிஒருவன், வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கியமான கதாப் பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். “காட்ஃபாதர்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் காட்ஃபாதர்’ படத்தில் நடிகை நயன்தாரா, சத்ய பிரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. அத்துடன் இப்படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |