ஈரோடு மாவட்டத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் குன்றி மற்றும் முலாம்கொம்பை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுக்கள் வழியாக மழைநீர் குண்டேரிபள்ளம் அணைக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதனால் அணைக்கு அருகே உள்ள விளங்கொம்பை கம்பனூர் ஆகிய மலைவாழ் மக்கள் காட்டாறுகளை கடந்து தான் வெளியே சென்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.