மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருமையிலாடி கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வயல் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே மூங்கில் காட்டிற்குச் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது.
அந்தக் குழந்தையை பத்திரமாக எடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.