Categories
தேசிய செய்திகள்

“காட்டுக்குள் கடத்திச் சென்று, 14 நாட்கள்…” திருமணத்திற்கு சென்ற பெண்ணின் கதறல்..!!

திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற பெண்ணை கடத்தி காட்டுக்குள் வைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்திலுள்ள கப்ரின் நகரில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நவம்பர் 9ஆம் தேதி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்வெளிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு வந்து மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை கடத்திச் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதன்பின் அங்குள்ள ஒரு பழைய பாழடைந்த வீட்டில் வைத்து பதினான்கு நாட்கள் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்துள்ளார். அந்தப் பெண் தப்பிக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. பின்னர் நவம்பர் 22ஆம் தேதி எப்படியோ அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்து தனது தந்தைக்கு போன் செய்து அவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

பின்னர் தந்தை மகளிடம் அந்த காட்டுக்குள் வழியைக் கேட்டறிந்து தன்னுடைய மகளை அங்கிருந்து மீட்டு சென்றார். மேலும் போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அந்த குற்றவாளியை தேடி சென்று அவரை பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |