காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் காட்டுத்தீ கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து தாண்டிக்குடி மலை அடிவாரப் பகுதியில் வத்தலகுண்டு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் காட்டுத்தீ பரவாமல் இருக்கவும், தீயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிமுறைகள் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வத்தலக்குண்டு நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், தன்னார்வலர்கள், தீயணைப்பு துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.