கேஸ் நிறுவன தொழிலாளி பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் விஜயின் புஷ்பா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜயன் இறந்துவிட்டதால் புஷ்பா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற புஷ்பாவை உறவினர்கள் அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புஷ்பாவிடம் கடைசியாக செல்போனில் சோலைமுத்து என்பவர் பேசியது தெரியவந்துள்ளது. இவர் சமையல் கேஸ் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதன் பின் காவல்துறையினர் சோலை முத்துவை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது புஷ்பாவுக்கும் சோலைமுத்தும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் அன்னமங்கலம் வனப்பகுதியில் தனிமையில் இருந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பா சோலைமுத்துவை வற்புறுத்தியுள்ளார். அப்போது தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை சோலைமுத்து எடுத்துக் கூறியும் புஷ்பா அதனை பொருட்படுத்தாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என அவரை மிரட்டியுள்ளார். இதனால் சோலைமுத்து புஷ்பாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சோலைமுத்து அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.