கேளை ஆட்டை வேட்டையாடிய குற்றத்திற்காக ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எக்கூர் வனப்பகுதியில் சிங்காரப்பேட்டை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் கேளை ஆட்டை வேட்டையாடி எடுத்து வந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தப்பி ஓடியவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாம்பசிவம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் சண்முகத்தை கைது செய்து, அவரிடம் இருந்த கேளை ஆடு, கம்பிச் சுருள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய சாம்பசிவத்தை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.