Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்…. அவதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் கண்காணிப்பு….!!

காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் கிராமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு சரக வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் அவ்வப்போது ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரன்னிமேடு, கிளிண்டல் போன்ற பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றி முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் கரும்பாலம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது.

இதில் 2 குட்டிகளுடன் கூடிய ஒரு காட்டு யானை சின்னகரும்பாலம் அருகே முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் அங்கிருக்கும் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் குட்டிகளுடன் யானை இருப்பதால் அதை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் அந்த யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |