கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
#VendhuThanindhathuKaadu
Directed by @menongautham
An @arrahman musical &
Produced by @VelsFilmIntl #VTK #SilambarasanTR pic.twitter.com/K2gobu2ZvQ— Silambarasan TR (@SilambarasanTR_) August 6, 2021
மேலும் இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டு ‘வெந்து தணிந்தது காடு’ என வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு காட்டுவாசி போல இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.