இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 653 பேருக்கும், டெல்லியில், 464 பேருக்கும், கேரள மாநிலத்தில், 185 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 174 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 154 பேருக்கும், தமிழகத்தில், 121 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 84 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 77 பேருக்கும், ஹரியானா மாநிலத்தில், 71 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நகரங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 57097 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது.