கட மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுகுடியை சேர்ந்த குமார், ஸ்டாலின், ஆறுமுகம், முருகன் ஆகியோர் வேட்டை நாய்கள் மூலம் கட மான்களை வேட்டையாடி இறைச்சிக்காக வெட்டிக் கொண்டிருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து ஸ்டாலின், குமார், ஆறுமுகம் ஆகிய மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய முருகனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.