Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானைகளை தடுக்க”… வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை… என்ன தெரியுமா…?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை  மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை தலைமையிலான வனத்துறையினர் தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காட்டு யானைகள் வரும் வழித்தடங்களை கண்டறிந்து அவை வயல்களுக்கு வருவதை தடுக்க இரவு நேரங்களில் கடும் குளிரில் தீமூட்டி கண்காணித்து வருகின்றார்கள். சில சமயங்களில் வயல்களுக்குள் யானை நுழைய முயற்சி செய்யும்போது விரட்டியடித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, “மழைக்காலம் முடிவடைந்து விட்டதால் பசுந்தீவனங்களுக்காக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை தேடி வருகிறது. இதனால் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இது குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |