Categories
தேசிய செய்திகள்

காட்டு யானைகள் அட்டூழியம்!… மரத்தில் சிக்கி தவித்த வனத்துறையினர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதனால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்கள் வனத்துறையிலிருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரின் கண்ணுக்கு காட்டுயானை ஒன்று தெரியவந்தது.

அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியது. இதன் காரணமாக உயிருக்கு பயந்து வனத்துறையினர் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித்தவித்தனர். அதன்பின் காட்டுயானை அங்கிருந்து சென்ற பிறகு வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

Categories

Tech |