இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசிய நாட்டின் ராணுவத் துறைக்கு பாத்தியப்பட்ட கே.ஆர்.ஐ நங்கலா 402 என்னும் நீர்மூழ்கி கப்பல் பாலி தீவிற்கு அருகே சுமார் 53 நபர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று அக்கப்பலில் இருந்து ரிப்போர்ட்டிங் அழைப்பு வரவில்லை என்று ராணுவத் துறையின் தளபதியான Hadi Tjahjanto கூறியுள்ளார். மேலும் இக்கப்பல் பாலி தீவிலிருந்தது சுமார் 60 மைல் தொலைவில் காணாமல் போயிருக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவத் துறையினர் அதனை தேடிப் பிடிப்பதற்காக இந்தோனேசியாவின் போர்க்கப்பலை அனுப்பியுள்ளார்கள். இதனையடுத்து இவ்வாறு காணாமல் போகும் கப்பல்களை மீட்பதற்காகவே தனிப்பட்ட கப்பலை ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் வைத்துள்ளது. எனவே இந்தோனேஷியாவின் ராணுவ தளபதி காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க இவ்விரு நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளார்.