இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தோணி அந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தோணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.