கோவில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அயம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலின் கோபுரத்தில் ஏழு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கலசங்கள் காணாமல் போனதைக் கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கலசங்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.