Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள லோக்கூர் பகுதியில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரதன் என்பவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

அதாவது மாணவி அவரது சித்தி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்போது சித்தி வீட்டின் உரிமையாளரின் மகன் ரதனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரதன் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |